கொரோனா விஷயத்துல... சீனா 'உண்மையைத்தான்' சொல்லுதுன்னு எப்டி நம்புறது?... அதிபர் குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா விஷயத்தில் சீனா உண்மையை சொல்கிறது என்பது எங்களுக்கு எப்படி தெரியும்? என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா விஷயத்தில் சீனா உண்மையைத்தான் சொல்கிறது என்பதை எப்படி நம்புவது? என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர், ''கொரோனா விஷயத்தில் சீனாவின் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் எண்ணிக்கை துல்லியமானது என்பது எங்களுக்கு எப்படி தெரியும்? அவற்றின் எண்ணிக்கை மறைக்கப்பட்டு உள்ளன,'' என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
