'பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு...' 'தோண்டப்படும் நூற்றுக்கணக்கான குழிகள்...' 'அச்சத்தை' விதைக்கும் 'கல்லறைக் காட்சிகள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசிலில் கொரோனா வைரஸால் 244 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சாவோ பாலோ நகரத்தில் உள்ள கல்லறையில் நூற்றுக்கணக்கில் குழிகள் வெட்டி வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின் சாவோ பாவ்லே நகரில் கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு உயிரிழப்பு எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந் நகரின் அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரேசிலின் சாவோ பாவ்லோ நகரில், அமைந்துள்ள மிகப்பெரிய கல்லறை ஒன்றில் பாதுகாப்பு உடைகள் அணிந்த ஊழியர்கள் உயிரிழந்த ஒருவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அங்கு நூற்றுக் கணக்கில் வெட்டி வைக்கப்பட்டுள்ள குழிகள் கொரோனா உயிரிழப்பு குறித்த அச்சத்தை விதைத்துள்ளன.
Tags : #CORONA #BRAZIL #CEMETRY #WORKERS #BURIED #DUG
