‘கடுமையான காய்ச்சல்’!.. ‘கிட்டத்தட்ட 8 நாள்..!’.. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த இளைஞர் பகிர்ந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தது குறித்து இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

லண்டனை சேர்ந்த ஜோசப் வாலிஸ் (Jozef Wallis) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 8 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கடுமையான காய்ச்சல், குளிர் நடுக்கம் மற்றும் உடல் வலியுடன் அவதியுற்றதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் மருத்துவர்கள் அன்பாக சிரித்த முகத்துடனே தன்னை கவனித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று முற்றிய நிலையில் தன்னுடன் சிகிச்சை பெற்றுவந்த இருவர் இறந்தது தன்னை வெகுவாக பாதித்ததாக தெரிவித்த அவர், வைட்டமின் சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணும் படி அறிவுறுத்தியுள்ளார்.
Tags : #CORONA #CORONAVIRUS #YOUTH
