உங்களுக்கு 'அருகில்' கொரோனா 'பாதித்தவர்' இருக்கிறாரா?... 'கண்டறிய' உதவும் மத்திய அரசின் 'புதிய' செயலி...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அறிய உதவும் ஆரோக்கியசேது என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஆரோக்கியசேது என்ற இந்த செயலி மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் தாங்கள் பாதிக்கப்படுவோமா என்பதை பொதுமக்கள் அறிய முடியும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபரின் வசிப்பிடத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து, ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்தின் அருகே கொரோனா பாதித்தவர் பகுதி இருந்தால் சுட்டிக்காட்டப்படும். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விலகியிருப்பது எப்படி எனவும் இதில் பரிந்துரைக்கப்படுகிறது.
அத்துடன் நமக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நாம் தொடர்பு கொண்டிருந்தால் கூட இந்த ஆப், நம் தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும் எனக் கூறப்படுள்ளது. ஆனால் நம்முடைய தகவல்களை மூன்றாம் நபர்களால் பார்க்க முடியாது எனவும், 11 மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை இந்தியா முழுவதும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
