'200 நாடுகளில் கொரோனா பாதிப்பு'... 'இந்த 7 நாடுகளில் மட்டும் பாதிப்பில்லை...' "எப்படி சாத்தியமானது?..."
முகப்பு > செய்திகள் > உலகம்உலகத்தில் சுமார் 200 நாடுகளில் கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 நாடுகள் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தென்பட்ட கொரோனா வைரஸ் மூன்றே மாதங்களில் ஏறக்குறைய உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. சுமார் 200 நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. சுமார் 47 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ஆகவே உலக சுகாதார நிறுவனம் இதை பெருந்தொற்று என்று அறிவித்துள்ளது. உலகத்தின் வளர்ந்த நாடுகளையும் திணறடித்து வரும் கொரோனா வைரஸ் 7 நாடுகளில் மட்டும் நுழையவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் தெற்கு சூடான், மலாவி, கொமோரோஸ் மற்றும் சாவ்டோம் ஆகிய நாடுகளில் இதுவரை ஒருவருக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இதேபோல், ஆசியாவின் துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஏமன் நாடுகளிலும் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.