'ஹெச்.ஐ.வி-க்கு' எதிராக போராடி... கொரோனாவால் 'உயிரிழந்த'... இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 02, 2020 11:09 PM

ஹெச்.ஐ.வி-க்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த பெண் விஞ்ஞானி கீதா ராம்ஜி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

South African Scientist Gita Ramjee dies due to Coronavirus

இந்திய வம்சாவளி ஆப்பிரிக்கரும், உலகின் பிரபல வைராலஜிஸ்ட்டுகளில் ஒருவருமான கீதா ராம்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன் அவர் லண்டனில் இருந்து ஆப்பிரிக்கா திரும்பியபோது அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு வளரும் ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ கூட்டமைப்பு சார்பில், ஹெச்.ஐ.வி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக சிறந்த பெண் விஞ்ஞானி விருது கீதா ராம்ஜிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.