“அவருக்கு கொரோனா இருக்கு!”... ‘இளைஞர் எடுத்த சோக முடிவு!’.. வீடியோவால் நடந்த அவலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் கொரோனா இல்லாத ஒருவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி அவரது கிராமத்தினர் அலட்சியமாக வெளியிட்ட வீடியோவில் அந்த நபர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த 35 வயதான முஸ்தபா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கேரளாவில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்த இவர் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். மதுரை பி.பி.குளம் அருகே உள்ள முல்லை நகரில் இருக்கக்கூடிய தனது தாயார் வீட்டில்தான் முஸ்தபா தங்கியிருக்கிறார்.
அப்போது அவருக்கு சளி, இருமல், உடல் சோர்வு உள்ளிட்ட பல அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு கோரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதிய அக்கம்பக்கத்தினர் சுகாதாரத்துறை மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் சுகாதாரத்துறையினர் முல்லை நகர் வந்து விசாரணை நடத்தி முஸ்தபாவையும் அவரது தாயாரையும் வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை வீடியோ எடுத்து அவர்களுக்கு கொரோனா இருப்பதாகவும் குறிப்பிட்டனர். முஸ்தபாவையும், அவரது தாயாரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறி அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னரே தாயாரையும் தன்னையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டு, அக்கம் பக்கத்தினர் வீடியோக்களை பரப்பியிருந்தது முஸ்தபாவுக்கு தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த முஸ்தபா செவ்வாய்க்கிழமை காலை மதுரையில் இருந்து நடந்து திருமங்கலம் நோக்கி சென்றதாகவும், அப்போது கப்பலூர் டோல்கேட்டில் அருகே சென்றபோது, அவ்வழியே சென்னையிலிருந்து நெல்லைக்கு சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரயிலின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து தன்னை மாய்த்துக் கொண்டார். அவரது உடலை மீட்ட மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
