"ஏப்ரல் 5 மிக முக்கியமான நாள்!"... கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து... பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று 3வது முறையாக உரையாற்றினார். அதில் ஏப்ரல் 5 மிக முக்கியமான நாள் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, "ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இந்திய மக்கள் ஊரடங்கிற்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கின்றனர். நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே, கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். 130 கோடி மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளனர். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவ்ரும் இறைவனின் வடிவம்" என்றார்.
மேலும், "ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
