இளம்வீரர்களுக்கு.... சம்பளத்தை வாரி வழங்கும் 'சாம்பியன்' அணி... யாரு 'டாப்பு' டக்கருன்னு பாருங்க?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு சாம்பியன் மும்பை அணி நடந்து முடிந்த ஏலத்தில் 6 வீரர்களை புதிதாக ஏலத்தில் எடுத்துள்ளது. தற்போது அணியில் உள்ள மொத்த வீரர்களின் எண்ணிக்கை 24. இதில் 16 உள்நாட்டு வீரர்களும், 8 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் மும்பை அணியில் உள்ள வீரர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதிக சம்பளம் வாங்கும் வீரராக கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். அவருக்கு ரூபாய் 15 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.
அவருக்கு அடுத்த இடங்களில் ஹர்திக் பாண்டியா(11 கோடி), க்ருணால் பாண்டியா(8.8 கோடி), நாதன் கூல்டர் நைல்(8 கோடி) பும்ரா( 7 கோடி) ஆகிய வீரர்கள் உள்ளனர். நடப்பு சாம்பியனான மும்பை அணி அதை தக்கவைத்துக்கொள்ள புதிதாக பல வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி வீரர்களின் சம்பள விவரம்:-
1. ஆதித்ய தாரே - 20 லட்சம்
2. ஆன்மோல் பிரீட் சிங் - 80 லட்சம்
3. அங்குல் ராய் - 20 லட்சம்
4. கிறிஸ் லின் - 2 கோடி
5. தவால் குல்கர்னி - 75 லட்சம்
6. திக் விஜய் தேஷ்முக் - 20 லட்சம்
7. இஷான் கிஷன் - 6.2கோடி
8. ஹர்திக் பாண்டியா - 11 கோடி
9. ஜஸ்பிரிட் பும்ரா- 7 கோடி
10. ஜெயந்த் யாதவ் - 50 லட்சம்
11. கிரண் பொல்லார்டு - 5.4 கோடி
12. க்ருணால் பாண்டியா - 8.8 கோடி
13. லசித் மலிங்கா - 2 கோடி
14. மிட்செல் மெக்லெனகன் - 1 கோடி
15. மோஷின் கான் - 20 லட்சம்
16. நாதன் கூல்டர் நைல் - 8 கோடி
17. பிரின்ஸ் பல்வந்த் ராய் சிங் - 20 லட்சம்
18. குயிண்டன் டி காக் - 2.8 கோடி
19. ராகுல் சாகர் - 1.9 கோடி
20. ரோஹித் சர்மா- 15 கோடி
21. சவுரவ் திவாரி - 50 லட்சம்
22. ஷெர்பேன் ரூதர்போர்டு - 2 கோடி
23. சூரியகுமார் யாதவ் - 3.2 கோடி
24. ட்ரெண்ட் போல்ட் - 3.2 கோடி
