'சென்னை TO பாண்டி'... 'சொந்தக்காரங்க வீட்டுக்கு போன இடத்தில்'... 'எதிரிக்கு கூட வரக்கூடாத துயரம்'... நெஞ்சை ரணமாக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை, இறுதிச் சடங்கு கூடச் செய்யாமல் சவக்குழியில் அலட்சியமாக வீசி செல்லும் காட்சி காண்போரை அதிரச்செய்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்படைந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மயானத்திற்கு அவரது உடலைக் கொண்டு சென்ற அதிகாரிகள், அவரது உடலைச் சவக்குழியில் வீசி, அலட்சியமாக உடலைத் தள்ளி விட்டார்கள்.
இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ஒருவரின் உடலை இவ்வளவு கேவலமாகக் குழியில் தள்ளி விடுவது எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். எதிரிக்குக் கூட இதுபோன்ற சூழ்நிலை வரக்கூடாது எனப் பலரும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்கள்.
Body of a Chennai man who had COVID 19 was physically thrown in the burial ground pit near Villiyanur in Puducherry.@ramyakannan @dsureshkumar pic.twitter.com/zCOmurl0fV
— R SIVARAMAN (@SIVARAMAN74) June 6, 2020