புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 25, 2020 01:16 PM

கொரோனா வைரஸ் காரணமாக 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் செய்யப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Coronavirus Outbreak: Puducherry cancels annual exam for class 1 to 9

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் 14 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 9 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுவை கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதேபோல் குஜராத்திலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUSOUTBREAK #PUDUCHERRY