தொடர்ந்து உயரும் கொரோனா... ஆனாலும் ஒரு 'சூப்பர்' குட் நியூஸ்... இந்த விஷயத்துல 'நம்மள' அடிச்சுக்க முடியாது!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவை ஆரம்பத்தில் இருந்து திறமையாக கையாண்டு வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வைத்து கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்தாலும், கடந்த மே மாதம் இந்தியாவுக்கு மிகவும் மோசமான மாதமாக மாறியது.

ஏனெனில் மே மாதத்தில் மட்டும் புதிதாக 1 லட்சத்து 53 ஆயிரத்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஜூன் 1 முதல் நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும், பொருளாதார நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்வதற்கும் அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த ஒன்பது நாட்களில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 76,000-க்கும் அதிகம் பதிவாகி உள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை கடந்துள்ளது. உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்த நிலையில் முதன்முறையாக இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை மொத்தம் 1,35,206 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; கிட்டத்தட்ட 1.33 லட்சம் பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்ற நாடுகளில் கொரோனா இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதுடன், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
