"இப்ப திருப்திதானே?".. 'போலீஸைப்' பார்த்ததும் 'பால் பாக்கெட்' பையை 'மாஸ்க்காக' மாற்றி 'சமாளித்த' நபர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் முகக் கவசம் அணியாமல் வந்து போலீசாரிடம் சிக்க நேர்ந்த நபர் ஒருவர் பதற்றத்தில் கையில் வைத்திருந்த துணிப் பையை காதிலும் முகத்திலும் மாட்டிக்கொண்டு சமாளித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

புதுச்சேரியின் லாஸ்பேட்டை பகுதியில் நடுத்தர வயது நபர் ஒருவர் துணியுடன் பால் வாங்க கிளம்பியுள்ளார். பால் வாங்கிக்கொண்டு திரும்பி செல்லும் வழியில் போலீசாரை திடீரென பார்த்ததும் அவர் செய்வதறியாது, தான் கையில் வைத்திருந்த பையை பாலோடு சேர்த்து முகத்தில் மாட்டி மாஸ்காக மாற்றியுள்ளார். கைப்பையின் காதுகளை தன் காதுகளில் மாட்டிக்கொண்டுமுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகளுள் ஒன்றாக மாஸ்க் அணிவது கருதப்படும் நிலையில், இந்த நபர் இப்படி மாஸ்க் போட மறந்ததை சமாளிக்க இவ்வாறு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் புதுச்சேரியில் முகக்கவசம் அணியவில்லை என்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
