"ஆஸ்பத்திரிக்கு போகணும்ங்க".. லாக்டவுனில் நடந்து வந்த கர்ப்பிணி.. போலீஸாரின் உச்சகட்ட மனிதநேயம்.. நெகிழவைத்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 28, 2020 01:18 PM

லாக்டவுனில் சிரமப்பட்டு மருத்துவமனைக்கு தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மனிதநேயத்துடன் காவலர்கள், காவல்துறை ஜீப்பை கொடுத்து அனுப்பி உதவியுள்ளனர். 

pregnant walking in lock down, TN police gives their jeep

பேறு காலம் என்பதால் அவ்வப்போது பரிசொதனை செய்துகொள்ளும் விதமாக தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை பார்த்த காவலர்கள் விசாரித்துள்ளனர். 

அப்போது அந்த பெண்மணி ஆஸ்பத்திரிக்கு செக்கப்பிற்காக போவதாக சொன்னதும் மனமிறங்கிய டிராபிக் காவலர்கள் சற்றும் யோசிக்காமல், காவலர்களின் ஜீப்பை கொடுத்து, பெண் காவலரையும் உடன் அனுப்பி வைத்தனர். 

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு வீடியோவாக வைரலாகி வருகிறது.