"பணத்த மட்டும் கொடுங்க.. கவர்மெண்ட் வேலை கன்ஃபார்ம்!".. டிஎன்பிஎஸ்சி அதிகாரி எனக்கூறி இளைஞர் செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற நாவப்பன் தான் ஒரு டிஎன்பிஎஸ்சி அதிகாரி என்று கூறி, பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக பலரிடமும் தெரிவித்து அவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இவர் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் உரிய காலத்திற்குள் வேலை வாங்கித் தரவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடத்தில் இவர் மீது அளித்த புகாரை இடுத்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரிடம் இருந்த அரசு முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
