நாலு 'ஃபேஸ்புக்' அக்கவுண்ட் வெச்சு... பொண்ணுங்க போட்டோவ 'மார்ஃபிங்' பண்ணி... கல்லூரி மாணவரின் 'ஷாக்கிங்' பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இளம்பெண்களின் படத்தை எடுத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக வெளியிட்டு அதன் மூலம் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கல்லூரி மாணவரை பரமக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து புகாரளிக்க தனிப்பிரிவு ஒன்றை காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அமைத்துள்ளார். அதில் புகார் ஒன்று தொலைபேசி மூலமாக வந்துள்ளது. தொடர்பு கொண்ட நபர் தனது மனைவியின் போலியான புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் யாரோ வெளியிட்டு தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். பணம் தரவில்லையென்றால் மனைவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன், எஸ்.பி வருண்குமாரின் உத்தரவின் பெயரில், நடத்தப்பட்ட விசாரணையில், பரமக்குடி உலகநாதபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஃபேஸ்புக்கில் நான்கு போலியான கணக்குகளை பயன்படுத்தி, அதில் இரண்டு கணக்குகள் மூலம் திருமணமான பெண்களின் புகைப்படங்களை ஃபேஸ்புக் அக்கவுண்டில் இருந்து எடுத்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவரின் செல்போனை ஆய்வு செய்த போது அதில் பல ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
