'லிஸ்ட்ல நம்ம பேரு இருக்குமா?'... 'மெயில் எப்ப வரும்'... 'கதிகலங்கி நிற்கும் ஊழியர்கள்'... பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே தலைகீழாக புரட்டி போட்டிருக்கும் நிலையில், 12 ஆயிரம் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்ப பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. விமான சேவை இல்லாத காரணத்தினால் விமான நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தசூழ்நிலையில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்துள்ளது. உலகின் பல நாடுகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். ஆனால் கொரோனாவால் தற்போது கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த விமானிகள் உள்பட தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே பணி நீக்கம் செய்யப்படவுள்ள 12 ஆயிரம் பேரில், நமது பெயரும் இருக்குமோ என்ற அச்சம் பல ஊழியர்களிடம் எழுந்துள்ளது. பணிநீக்கம் குறித்த தகவல் எப்போது வரும் என ஊழியர்கள் பலரும் பயத்துடன் பொழுதை கழித்து வருகிறார்கள்.