மீண்டும் தந்தையானார் FACEBOOK அதிபர் மார்க் .. குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Mar 25, 2023 09:48 AM

உலக பணக்காரர்களில் ஒருவரும் பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனருமான மார்க் ஸக்கர்பெர்க் தனக்கு மகள் பிறந்திருப்பதாக அறிவித்திருக்கிறார். அதனுடன் குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனிடையே அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Mark Zuckerberg and Wife Priscilla Chan Welcome Baby girl

                           Images are subject to © copyright to their respective owners.

மார்க் ஸக்கர்பெர்க்

கடந்த 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர் மார்க் ஸக்கர்பெர்க். இவர் தனது 19 வயதில் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, தனது நண்பர்களுடன் இணைந்து பேஸ்புக்கை உருவாக்கினார். முதலில் நண்பர்களுக்குள் உரையாடவும் படங்களை பகிரவும் பயன்படுத்தப்பட்ட இந்த சமூக வலை தளத்தை 2012 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார் மார்க். அதன்பிறகு, வாட்சப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல சமூக வலை தளங்களையும் கைப்பற்றியது பேஸ்புக். இந்த மூன்று சமூக வலை தளங்களுக்கும் தாய் நிறுவனமாக மெட்டா திகழ்கிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் செயல்பட்டு வருகிறார்.

Mark Zuckerberg and Wife Priscilla Chan Welcome Baby girl

 Images are subject to © copyright to their respective owners.

திருமணம்

மார்க் ஸக்கர்பெர்க் முதன்முறை கடந்த 2003 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பிரசில்லா சானை சந்தித்தார். இரண்டாம் ஆண்டு மாணவராக மார்க் இருந்தபோது, பிரிசில்லா சான்-ஐ அவர் சந்தித்திருக்கிறார். பல்கலைக்கழகத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது இருவருக்குமான சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து இருவரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் நட்பு காதலாக மாற 2010 ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாக வசிக்கத் துவங்கினர். இந்த தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இந்த தம்பதி தங்களது 10 வது திருமண விழாவை கொண்டாடினர். இந்த தம்பதிக்கு ஆகஸ்ட் மற்றும் மேக்ஸிமா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

Mark Zuckerberg and Wife Priscilla Chan Welcome Baby girl

Images are subject to © copyright to their respective owners.

நெகிழ்ச்சி போஸ்ட்

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக மார்க் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிரசில்லா பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இதுதொடர்பாக மார்க் சக்கர்பர்க் எழுதியுள்ள பதிவில்,"உலகிற்கு வரவேற்கிறோம். ஆரேலியா சான் ஸக்கர்பெர்க். நீங்கள் ஒரு சிறிய ஆசீர்வாதம்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் மார்க் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mark Zuckerberg (@zuck)

Tags : #MARK ZUCKERBERG #PRISCILLA CHAN #BABY

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mark Zuckerberg and Wife Priscilla Chan Welcome Baby girl | World News.