‘கரைபுரண்டு ஓடும் ஆற்றின் நடுவே சிக்கிய நபர்கள்’.. ‘ஹெலிகாப்டரில் மீட்க வந்த ராணுவம்’.. பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 20, 2019 06:08 PM

ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட இருவரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்ட ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

WATCH: IAF rescues people from flooded Tawi river in Jammu

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் தாவி என்னும் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பின் மீது 4 மீனவர்கள் சிக்கியுள்ளனர். இதில் இரண்டு பேர் ஆற்றில் செல்லப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட இருவரை மீட்க போராடினர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்ததால் ராணுவ வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் உடனே சம்பவ இடத்து வந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரின் உதவியுடன் இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மற்ற இருவரும் மீட்கபட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : #INDIAN AIR FORCE #RESCUE #FLOOD #TAWI #RIVER