VIDEO: 'WIKIPEDIA மாதிரியே'... கைலாசா குறித்து வெளியான அதிரடி 'அப்டேட்'!.. ஆண்டியா? அதிபரா?.. நித்தியானந்தா ஓபன் டாக்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விக்கிபீடியாவை போலவே நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கியுள்ள நித்தியானந்தா தன்னை பற்றிய தகவல்களை எல்லாம் அதில் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார்.
![nithyanandha talks about wikipedia kailasa reservebank viral nithyanandha talks about wikipedia kailasa reservebank viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/nithyanandha-talks-about-wikipedia-kailasa-reservebank-viral.jpg)
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர் வரும் விநாயகர் சதுர்த்தியன்று 22-ம் தேதி அதை முறையாக அறிமுகம் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய நித்தியானந்தா, விக்கி பீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள 'நித்தியானந்தாபீடியா' என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
தன்னை ஆண்டி என்றாலும் ஓகே தான், அதிபர் என்றாலும் ஓகே தான் என்றும் கலகலப்பாக பேசியிருக்கிறார். நித்தியானந்தாவின் புது அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை மட்டுமல்ல, சிரிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)