இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 13, 2019 10:14 AM

1. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் படுகாயமடைந்தனர்.

Tamil News important headlines read here for more DEC 13

2. எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர், அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

3. ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பான சிபிஐ விசாரணைக்கு கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

4. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

5. சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோயையும், இதயக் கோளாறுகளையும் தவிர்க்கலாம் என பாஜக எம்.பி கணேஷ் சிங் கூறியுள்ளார்.

6. 30 நாள் பரோல் முடிவடையும் நிலையில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

7. மத்திய நிதி அமைச்சக செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

8. நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 18-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

10. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் சென்னை வந்துள்ளன.

Tags : #TOPNEWS #HEADLINES #CABPROVOCATION #NITHYANANDA #INDVWI #CHENNAIRAINS