'கைலாசா' எங்கிருக்கிறது?... புதிதாக 'வீடியோ' வெளியிட்டு... 'விளக்கம்' அளித்த நித்யானந்தா!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 11, 2019 03:02 PM
கைலாசா என்னும் தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானதில் இருந்து, அந்த நாடு எங்கிருக்கிறது என்பதை அறிய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து கடந்த திங்களன்று வெளியிட்ட வீடியோவில் இதுவரை 12 லட்சம் பேர் கைலாசாவில் இணைய ரெக்வஸ்ட் கொடுத்து இருப்பதாகவும், நாளொன்றுக்கு 1 லட்சம் பேர் பார்வை இடுவதால் சர்வர் முடங்கி விட்டதாகவும் நித்யானந்தா சலித்து கொண்டிருந்தார்.
![Where is Kailasaa?... Nithyananda released new video on FB Where is Kailasaa?... Nithyananda released new video on FB](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/where-is-kailasaa-nithyananda-released-new-video-on-fb.jpg)
இந்தநிலையில் புதிய வீடியோ ஒன்றை நித்யானந்தா வெளியிட்டு இருக்கிறார். அதில், ''எனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தை சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.
ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்குகிறோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. கைலாசா என்பது ‘எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி’. கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் நம் மீது பழி சுமத்துப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் உயருகிறது. மேலும் மேலும் பலர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள். தாக்குதலை எதிர் கொள்பவர்தான் வரலாறு படைப்பார்கள். என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம்,'' என்று பேசியிருக்கிறார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)