1, கொரோனா பாதிப்பில் 411 பேருடன் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

2, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல், மெழுகுவர்த்தி, மொபைல் லைட் என்பனவற்றை எரியவிட்டு கொரோனாவுக்கு எதிரான வெளிச்சத்தைக் காட்டுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3, இந்தியாவில் 2,301 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக பதிவாகியுள்ளது. இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 157 பேர் குணமடைந்துள்ளனர்.
4, கொரோனா வைரஸ் பாதித்தவர் வேறு நபருடன் நெருக்கமாக அருகில் நின்று பேசுவதன் மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5, உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது.
6, சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகரப் பெருநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
