“சென்னையின் பிரபல மாலில் பணிபுரிந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா!.. இந்த தேதியில அங்க யாராச்சும் போனீங்களா?”.. சென்னை மாநகர பெருநகராட்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஃபீனிக்ஸ் மாலில் இயங்கிவந்த லைஃப் ஸ்டைல் ஷோ ரூமில் பணியாற்றிய 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, பிற ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக மார்ச் 10 -ஆம் தேதி முதல் மார்ச் 17-ஆம் தேதிக்குள் சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் இருக்கும் லைஃப் ஸ்டைல் ஷோ ரூம்க்கு சென்ற வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பின் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை
கூடுமானவரை எல்லாருக்கும் பகிரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரங்களை 044 2538 4520 மற்றும் 044 4612 2300 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : #CORONA #CORONAVIRUS
