கல்யாணமாகி 10-வது நாள்.. மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த மணமகள்.. கோபத்தில் பெண்வீட்டார் செஞ்ச பகீர் காரியம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Nov 23, 2022 04:05 PM

சேலத்தில் திருமணமான 10 வது நாளில் மணப்பெண், தன்னுடைய காதலனுடன் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில் பெண்வீட்டார் காதலனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த பொருட்களை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newly married bride eloped with ex boyfriend in Salem

Also Read | "அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும்".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. இரக்கப்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள மரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பூர்ணிமா என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரம் பூர்ணிமாவின் பெற்றோருக்கு தெரிய வந்திருக்கிறது. அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உறவுக்கார இளைஞர் ஒருவருக்கு பூர்ணிமாவை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.

இதனால் மனமுடைந்த அஜித் குமார், தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவனையில் சேர்ந்திருக்கின்றனர். பின்னர் அவர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியிருக்கிறார். இதனிடையே திருமணமாகி சென்ற பூர்ணிமா தனது கணவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜித் குமார் மற்றும் பூர்ணிமா கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.

Newly married bride eloped with ex boyfriend in Salem

விஷயத்தை அறிந்த பெண் வீட்டார், அஜீத் குமாரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த வாகனம், தண்ணீர் டேங்க் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தியிருக்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அஜித் வேலுவின் தாயார் தங்கமணி தீவட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பூர்ணிமாவின் தந்தை மாணிக்கம், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, கணபதி, ராஜா உள்ளிட்டோரை கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

திருமணமான 10 வது நாளில் காதலனுடன் மணப்பெண் சென்றதால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், காதலனின் வீட்டில் இருந்த பொருட்களை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஒரே எரிமலை 16,000 ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமா..?? உலகையே அச்சுறுத்தும் தம்போரா எரிமலையின் திகில் பின்னணி..!

Tags : #SALEM #NEWLY MARRIED #BRIDE #EX BOYFRIEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Newly married bride eloped with ex boyfriend in Salem | Tamil Nadu News.