"பக்கத்துல எங்காவது போயிருப்பான்னு தான் நெனச்சேன்.. ஆனா".. கல்யாணமாகி 2 மாசத்துல மாயமான மணப்பெண்.. அதிர்ச்சி அடைந்த மணமகன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Oct 20, 2022 08:06 PM

சென்னையில் திருமணமான 2 மாதங்களில் புதுமணப்பெண் மாயமான சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The newlywed woman escaped from her husband house with gold and cash

Also Read | தீபாவளி ஸ்பெஷல் சந்தை.. சரவெடியாய் விற்றுத் தீர்ந்த ஆடுகள்.. அடேங்கப்பா இவ்வளவு கோடிக்கா?

சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி வேலம்மாள். 50 வயதான விஜயகுமார் டீ கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அருகில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவரான நடராஜன் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.

The newlywed woman escaped from her husband house with gold and cash

இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வந்திருக்கிறார். அப்போது கயல்விழி என்ற பெண்ணுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில், தான் வசித்துவரும் விடுதிக்கு அருகில் சிலர் தன்னை கிண்டல் செய்வதாகவும் ஆகவே உடன் வரும்படியும் அவர் நடராஜனிடம் சொல்லியதாக தெரிகிறது. அப்போது, நடராஜனும் உதவி செய்திருக்கிறார். இதனிடையே தான் வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசித்து வருவதாகவும், தன்னை வயதான ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்ததாகவும் அந்த பெண் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே இருவரும் நட்பாக பழகிவர, நாளடைவில் அது காதலாகவும் மாறியுள்ளது. கயல்விழி, நடராஜனின் வீட்டுக்கு வந்து விஜயகுமார் மற்றும் அவரது மனைவியுடன் பாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களது காதல் குறித்து வீட்டில் பேசியிருக்கிறார் நடராஜன். அவர்களும் ஓகே சொல்லவே, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

தனது வீட்டுக்கு தெரியவேண்டாம் என கயல்விழி முன்னரே நடராஜனிடம் கூறியதாகவும், அதனை மணமகன் வீட்டார் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் நடராஜன் வெளியே சென்றிருக்கிறார். வீடு திரும்பியபோது வீட்டில் அவரை காணவில்லை. அப்போது அவர் மனைவிக்கு போன் செய்திருக்கிறார். அப்போது அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்க்கும்போது துணிகள் கலைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

The newlywed woman escaped from her husband house with gold and cash

இதனிடையே, அவரது அம்மாவும் அங்கே வர வீட்டில் இருந்த அலமாரியை பரிசோதனை செய்திருக்கின்றனர் குடும்பத்தினர். அப்போது அதில் இருந்த 17 சவரன் நகைகள், பணம் ஆகியவை காணமல்போனதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நடராஜன், தாம்பரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்.  இதனிடையே  அந்தப் பெண்ணின் பெயர் கயல்விழி அல்ல, அபிநயா என்பதும் அவர் மதுரையை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, மதுரை காவல்துறையினருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாயமான மணப்பெண்ணை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Also Read | "நீங்க பண்ணது தப்புங்க".. கோவப்பட்ட விக்ரமன்.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த காரசார விவாதம்..!

Tags : #NEWLY MARRIED #HUSBAND #WOMAN #HUSBAND HOUSE #GOLD #CASH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The newlywed woman escaped from her husband house with gold and cash | Tamil Nadu News.