காதலை மறக்க முடியாமல் புதுப்பெண் விபரீத முடிவு.. மனைவியின் முடிவை தாங்காத மாப்பிள்ளையும் அடுத்து எடுத்த சோகமுடிவு..!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டையை அடுத்த குந்தலம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கட்டிட மேஸ்திரியாக இவர் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியை அடுத்த செவரப்பூண்டி என்னும் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 09 ஆம் தேதி, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் நடைபெற்றது.
திருமணம் செய்து கொண்ட முருகன் மற்றும் சந்தியா ஆகியோர், திருப்பதிக்கு சென்று சாமி தரிசனமும் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னர், ஊருக்கு திரும்பிய புதுமண ஜோடி, சந்தியாவின் அம்மாவின் வீட்டிற்கும் சமீபத்தில் விருந்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. உடை மாற்றிக் கொண்டிருந்த சந்தியா, திடீரென அறையில் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டதும் பதறிப் போன உறவினர்கள், உடனடியாக சந்தியாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். ஆனால், சந்தியா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது எலி பேஸ்ட் மூலம் விபரீத முடிவை சந்தியா எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சந்தியாவின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
இதனிடையே, தனது வீட்டிற்கு சென்று வருவதாக கிளம்பிய முருகன், வயல்வெளி பம்பு செட்டில் வைத்து விபரீத முடிவை எடுத்துள்ளார். திருமணமாகி ஒரு வாரத்திற்குள் மனைவியும் விபரீத முடிவை எடுத்ததால், விரக்தியில் இருந்த கணவரும் விபரீத முடிவை எடுத்தது இருவரின் குடும்பத்தினரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வந்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், சோமஸ்படியை சேர்ந்த ஒருவருடன் ஏற்கனவே சந்தியாவுக்கு திருமணமான நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே மாதத்தில் அவர் பிரிந்து வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் லாரி ஓட்டுநரான ஏழுமலை என்பவருடன் சந்தியா காதலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஏழுமலையுடன் காதலில் இருந்த சந்தியாவுக்கு முருகனுடன் திருமண நிச்சயத்தை சில மாதங்களுக்கு முன்பு அவரின் பெற்றோர்கள் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் துளி கூட விருப்பமில்லாமல் இருந்த சந்தியா, பெற்றோர் வற்புறுத்தலின் பெயரில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் என கூறப்படுகிறது.
சந்தியா மறைவை அறிந்த அவரது காதலன் ஏழுமலையும் சோகத்தில் விபரீத முடிவை எடுக்க முயன்று தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமணமான ஒரு வாரத்தில், இப்படி அடுத்தடுத்து நேர்ந்த விபரீத சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | "இப்ப எல்லாம் ஸ்கூலுக்கு போனா தான் Fresh'ஆ இருக்கு".. 9 மணி ஆனதும் டான்'னு என்ட்ரி கொடுக்கும் குரங்கு

மற்ற செய்திகள்
