அட இருங்கப்பா சாப்பிட்டு வர்றேன்.. திருமணத்துக்கு முன்னாடி பீட்சாவை ஒரு கட்டு கட்டிய மணப்பெண்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Oct 20, 2022 10:23 PM

மணப்பெண் கோலத்தில் இருக்கும் பெண் ஒருவர் பீட்சா சாப்பிடும் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

bride enjoys a pizza before the wedding ceremonies video

பொதுவாக திருமணம் என்பதே பல்வேறு வேலைகளை உள்ளடக்கியது. இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதிலுமே அப்படித்தான் இருக்கிறது. வாழ்வின் முக்கிய தருணமாக மக்கள் அதனை கருதுவதால் அன்றைய தினத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்கள் அனைத்துமே பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுவிடும். குறிப்பாக உணவுகள். திருமணத்திற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்து அளிக்க, திருமண நாளுக்கு பல மாதங்களுக்கு முன்னரே மெனு தயார் செய்யப்பட்டுவிடும். அதேபோல, மணமக்களுக்கு வேண்டிய உடைகள் மற்றும் ஆடை அணிகலன்கள் தேர்வு எல்லாமே அதிக நேரத்தை உறிஞ்சிக்கொள்ளும் விஷயங்கள்.

இதெல்லாம் ஒருபுறம் என்றால் திருமண தினத்தன்று நடைபெறும் சடங்குகளிலேயே மணமக்கள் டயர்டாகியும் விடுவர். அப்படி திருமண வைபவத்திற்கு மத்தியில் ஆர்வமாக பீட்சாவை உண்ணும் பெண் ஒருவரின் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

bride enjoys a pizza before the wedding ceremonies video

பிங்க் நிற லெஹங்கா ஆடையில் சேரில் அமர்ந்திருக்கும் அந்த பெண், பீட்சாவை பொறுமையாக சுவைத்து சாப்பிடுகிறார். அவருக்கு அருகே மற்றொருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ எப்போது? எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதேபோல, உண்மையாகவே இது திருமணம் தானா? அல்லது வேறு ஏதேனும் ஷூட்டிங்கா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதுவரையில் இந்த வீடியோ 3 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. 6000 பேர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த பதிவில் ஒருவர்,"உங்களால் பீட்ஸாவை விட்டுக்கொடுக்க முடியவில்லை என்றால் இப்படித்தான்" என கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொருவர்,"நான் என்னுடைய திருமணத்தின்போது மிகுந்த பதட்டத்தில் இருந்தேன். அப்போது என்ன சாப்பிட்டேன் என்பதே எனக்கு நினைவில்லை. ஆனால், இவர் தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்து அதை ரசித்தும் செய்திருக்கிறார்" என்றும் "இப்போது திருமணத்தில் பீட்சா பரிமாறப்படுகிறதா?" என இன்னொருவரும் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

 

Tags : #BRIDE #PIZZA #VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bride enjoys a pizza before the wedding ceremonies video | World News.