4வது திருமணம் ஆன 4 மாதத்தில் காணாமல் போன புதுப்பெண்.! விசாரணையில் காத்திருந்த ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அமைந்துள்ள அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். டிப்ளமோ படித்துவிட்டு மளிகை கடை ஒன்றை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
சமூக வலைத்தளம் மூலம் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவரிடம் ஸ்டீபன் பேசி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் சரண்யா மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கு இடையே இருந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை திருமணம் செய்யுமாறு ஸ்டீபனிடம் சரண்யா வற்புறுத்த, இது பற்றி தனது குடும்பத்தினரிடமும் ஸ்டீபன் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட ஸ்டீபனின் பெற்றோர்கள் சரண்யாவை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, கடந்த மே மாதம் 26 ஆம் தேதி, வாழப்பாடி அருகே உள்ள கோவில் ஒன்றில் வைத்து ஸ்டீபன் - சரண்யா திருமணம் நடந்துள்ளது.
கடந்த நான்கு மாத காலம் ஸ்டீபன் வீட்டில் வசித்து வந்த சரண்யா, அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று சில நாட்கள் கழித்து திரும்பி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்டீபனின் பெற்றோர்கள் சரண்யாவிடம் கேட்டபோது உறவினர்கள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறியுள்ளார் சரண்யா.
இதனிடையே திடீரென வீட்டில் இருந்து சரண்யா மாயமான நிலையில், செல்போனில் அவரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்றும் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணமும் திருடு போயுள்ளதும் தெரிய வந்தது. இதனிடையே சரண்யாவை பல இடங்களில் ஸ்டீபன் தேடிய பிறகும் அவர் எங்கேயும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் ஸ்டீபனின் தந்தை இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர் சரண்யாவின் செல்போனை வைத்து அவர் சேலத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேரடியாக சென்று சரண்யாவை அழைத்து வந்த போலீசார், அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது சரண்யா சொன்ன தகவல், அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. அப்போது சரண்யாவுக்கு ஏற்கனவே பன்னீர்செல்வம் என்றவருடன் திருமணம் நடைபெற்றதாகவும், அதில் மூன்று மகன்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்று சரண்யாவுக்கு பேரப்பிள்ளைகளும் இருப்பது தெரிய வந்துள்ளது.
முதல் கணவரிடம் இருந்து பிரிந்த சரண்யா, சென்னை, கோவை உள்ளிட்ட சேர்ந்த பகுதியை சேர்ந்த நபர்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து தான், ஸ்டீபனிடம் பேசி அவரை திருமணம் செய்து தலைமறைவான போது போலீசில் சிக்கி உள்ளார்.
பலரை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் திருடி சென்ற சரண்யா மற்றும் அவரது தாய் மாமனாக நடித்த கோவை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திலும் போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர்.
நான்கு பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் தொடர்பான செய்தி தற்போது பலரது மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.