"அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும்".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. இரக்கப்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் வித்தியாசமான முறையில் ஒருமிடமிருந்து 18.5 லட்ச ரூபாயை சுருட்டிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இணையமும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பல முக்கியமான மாற்றங்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. சொல்லப்போனால் இதன்மூலம், மனிதகுலம் பல மகத்தானை சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை மோசமான வழிகளில் பயன்படுத்தும் கும்பல்களும் சமீப ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டுதான் செல்கின்றன. பிறரது கிரெடிட், டெபிட் கார்டு விபரங்களை திருடுவது, ரகசிய தகவல்களை ஹேக் செய்வது என சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
நாள்தோறும் புதுப்புது வழிகளில் அப்பாவி மக்களை குறிவைத்து இந்த மோசடி கும்பல்கள் தங்களது கைவரிசைகளை காட்டிவருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவை சேர்ந்த 52 வயதான ஒருவரிடம் இருந்து வித்தியாசமான முறையில் பணத்தை சுருட்டியிருக்கிறது ஒரு மர்ம கும்பல்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரை சேர்ந்தவர் மனிந்தர் சிங் ஜப்பல். இவருக்கு கடந்த 16 ஆம் தேதி வாட்சப் கால் வந்திருக்கிறது. அதில், பேசியவர் தன்னுடைய பெயர் பாக்கா சிங் என்றும் தான் கனடாவில் வசித்துவருவதாகவும் கூறியுள்ளார். மேலும், ஜப்பலின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தான் மிகவும் வேண்டப்பட்டவர் என்றும் கூறியுள்ளார். இதனை ஜப்பல் நம்பியிருக்கிறார்.
மேலும் அவர் தனது தாயார் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அறுவை சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட அவசரமாக ஆன்லைனில் பணம் செலுத்துமாறு ஜப்பலிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த நபர் ஜப்பலின் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை மாற்றுவதாக உறுதியளித்திருக்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஜப்பலுக்கு வேறொரு நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தன்னை வங்கி நிர்வாகி என்று கூறி, பணம் மாற்றப்படுவதாகக் கூறியிருக்கிறார். ஆனால் வங்கியின் சர்வர் செயலிழந்ததால் நேரம் எடுக்கும் எனவும் அந்நபர் சொல்லியிருக்கிறார்.
இப்படி ஜப்பலின் அக்கவுண்டில் இருந்து சுமார் 18.5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்ட நிலையில் தான் ஜப்பலுக்கு இதுகுறித்து சந்தேகமே வந்திருக்கிறது. ஒருவேளை இது ஏமாற்று வேலையாக இருக்குமோ? என சந்தேகமடைந்த ஜப்பல், உடனே தனக்கு முதலில் போன் பேசியவருக்கு அழைத்திருக்கிறார். ஆனால், போன் போகவே இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து யசோதரா காவல்நிலையத்தில் ஜப்பல் புகார் அளித்திருக்கிறார். இதன்படி IPC 419,420 ஆகியவற்றன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
Also Read | அர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அரேபியா... மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவூதி அரசர் சல்மான்..!