கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளில்.. திறக்கப்படாத வீட்டுக் கதவு.. "உள்ள போய் பாத்ததும்"... மணமக்களை பார்த்து அலறிய அக்கம் பக்கத்தினர்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 01, 2022 05:30 PM

திருமண தினத்திற்கு முன்பாக, மாப்பிள்ளை உள்ளிட்ட ஆறு பேருக்கு மர்மமாக நடந்த சம்பவம் தொடர்பான செய்தி, கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Nigeria bride groom and others left unconscious

Also Read | "இத்தனை வருசமா இருந்தும் தெரியாம போச்சே".. சமையலறையின் தரையில் புதைக்கப்பட்டு இருந்த கிண்ணம்.. ஓப்பன் பண்ண தம்பதிக்கு செம 'ஷாக்'!!

நைஜீரிய நாட்டில், ஒபின்னா (Obinna Dieke) என்ற வாலிபருக்கும் நெபெச்சி (Nebechi) என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனையடுத்து, திருமணம் முடிந்து அதே நாளில், மணமக்களுடன் உறவினர்கள் சிலரும் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில், மறுநாள் காலையில் மணமக்கள் உட்பட உறவினர்கள் என யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் தான், அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பெயரில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கே சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

மணமக்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் அந்த வீட்டிற்குள் நுரை தள்ளிய நிலையில், மயங்கி கிடந்ததைக் கண்டு உள்ளே சென்றவர்கள் நடுங்கி போயினர். உடனடியாக, அவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கவும் செய்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே புது மாப்பிள்ளையும், மேலும் ஐந்து உறவினர்களும் உயிரிழந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், மணப்பெண் நெபெச்சி உள்ளிட்ட மற்ற சில உறவினர்கள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Nigeria bride groom and others left unconscious

ஒரே வீட்டில் இருந்த நபர்கள், எப்படி நுரை தள்ளி மயங்கி கிடந்தார்கள் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தியும் வந்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், மின்சார ஜெனரேட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக, இதனை சுவாசித்து மணமக்களும் விருந்தினர்களும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், அவர்கள் மயக்கமடைந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது.

இது தவிர வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். வாயு கசிவு காரணமாக மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் உயிரிழந்த விஷயம், பேரதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | 6,500 வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்த பெண்.. "உடம்பு முழுக்க தங்கம் வெச்சே புதைச்சு இருக்காங்க".. மெர்சல் ஆன மக்கள்

Tags : #NIGERIA #COUPLE #UNCONSCIOUS #NEWLY MARRIED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nigeria bride groom and others left unconscious | World News.