"என் மனைவிய கொலை பண்ணிட்டேன்".. போலீசாருக்கு வந்த அழைப்பு.. "வீட்டுல போய் பாத்ததும் தரைல".. திடுக்கிடும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாவல் நிலையத்திற்கு அழைத்து நபர் ஒருவர் சொன்ன தகவலும் அதன் பின்னர் நடந்த சம்பவமும் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
டெல்லியின் ஹரிஷ் விஹாரில் உள்ள காவல் நிலையத்திற்கு கடந்த சில தினங்கள் முன்பாக காலையில் தொலை பேசி மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய நபர், தனது மனைவியை கொன்று விட்டதாக கூறி போலீசாருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடமான சுஷீலா கார்டனில் போலீசார் சென்றுள்ளனர். யோகேஷ் குமார் என்ற 35 வயது நபர் போலீசாருக்கு அழைத்து மனைவியை கொன்றதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது மனைவி அர்ச்சனா பேச்சு மூச்சு இல்லாமல் தரையில் கிடந்ததை கண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால், அர்ச்சனா ஏற்கனவே இறந்து விட்டுட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கடுத்து, யோகேஷ் குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து மனைவியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து யோகேஷ் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், சில பரபரப்பு தகவல்களும் தெரிய வந்துள்ளது. அதன்படி, யோகேஷ் குமார் குடும்பம் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அர்ச்சனா பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான தொகையை கடனாக வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பெயரில், யோகேஷ் குமார் மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு இடையே தகராறும் சமீபத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தான் மனைவி அர்ச்சனாவை கடும் கோபத்தில் இருந்த யோகேஷ் குமார், கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதன் காரணமாக, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து போயுள்ளார்.
மனைவியை கொலை செய்ததுடன் நேரடியாக போலீஸ் நிலையம் அழைத்து அவர் விஷயத்தை சொன்ன விஷயம், அதிகம் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. மேலும், யோகேஷ் குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.