"அந்த சிரிப்புக்கு பின்னாடி இப்படி ஒரு துயரமா?"..டோல்கேட்டில் தின்பண்டம் விற்று வைரலான கல்லூரி மாணவி..! படிப்பை தொடர முடியாத அவலம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Nov 23, 2022 02:36 PM

இணையத்தில் நாம் அதிக நேரம் உலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்களை குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

College student who sell snacks in tollgate poor family story

Also Read | "அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும்".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. இரக்கப்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

அதிலும் குறிப்பாக, சில விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் நம்மிடையே ஒருவித தாக்கத்தையே உருவாக்கி செல்லும்.

அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் மனம் உருக வைத்திருந்தது.

டோல்கேட்டில் கல்லூரி மாணவி ஒருவர், அதிகாலையில் சிரித்த முகத்துடன் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. மிகவும் புன்னகைத்த படி, ஒரு பாசிடிவ் Vibe கிடைக்கும் அளவுக்கு அவர் விற்பனை செய்து வந்தது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி இருந்தது. ஆனால், அந்த சிரிப்பிற்கு பின்னால் உள்ள கஷ்டம் தான் தற்போது பலரையும் கலங்கடித்து வருகிறது.

College student who sell snacks in tollgate poor family story

விருத்தாச்சலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வந்த தம்பதி சண்முகம் - குப்பு. இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே ரயிலடி அருகேயுள்ள மோட்டார் அறை ஒன்றில் குடும்பமாக தங்கி வருகின்றனர். கூலித்தொழில் செய்யும் சண்முகம் மற்றும் குப்பு ஆகியோர், மோட்டார் அறைக்கு பின்புள்ள நிலத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சண்முகம் அப்பு தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

College student who sell snacks in tollgate poor family story

இதில் முதல் இரண்டு குழந்தைகளும் அப்புவின் தாய் வீட்டில் தங்கி பள்ளி படிப்பை முடித்த நிலையில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூத்த மகளின் நர்சிங் கனவை அவரது கணவர் நிறைவேற்றி வருவதாக தெரிகிறது. இவர்களின் இரண்டாவது மகள் தான் வசந்தி. இவர் கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள மேட்டுக்குப்பத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஆனால், தற்போது கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் போக்குவரத்து கட்டணத்திற்கும் பெரிய அளவில் பணம் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வருகிறார் வசந்தி. இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தின்பண்டங்களை விற்று, குடும்பத்தின் கஷ்டத்திற்கு பங்கேற்க தொடங்கியுள்ளார் வசந்தி.

College student who sell snacks in tollgate poor family story

இது பற்றி பேசும் வசந்தி, கல்லூரிக்கு தினந்தோறும் மூன்று பேருந்துகள் ஏறி செல்வதற்கு சுமார் 200 ரூபாய் வரை ஒரு நாளைக்கு ஆவதாக கூறி உள்ளார். டோல்கேட்டில் வேலை பார்த்துக் கொண்டு பெற்றோருக்கு உதவி செய்து வருவதாக கூறும் வசந்தி, பெற்றோர் வற்புறுத்தல் பேரில் டோல்கேட்டில் வேலை செய்யவில்லை என்றும், அவர்கள் கஷ்டத்தை பார்த்து தானாக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வசந்தி அதிகாலையில் சிரித்த முகத்துடன் வேலை செய்யும் வீடியோ பலரது மனதையும் கவர்ந்திருந்தாலும் அவர் பின்னால் உள்ள குடும்ப சூழ்நிலை ஏராளமானோரை மனம் நொறுங்க வைத்துள்ளது.

Also Read | "என் மனைவிய கொலை பண்ணிட்டேன்".. போலீசாருக்கு வந்த அழைப்பு.. "வீட்டுல போய் பாத்ததும் தரைல".. திடுக்கிடும் பின்னணி!!

Tags : #COLLEGE #STUDENT #COLLEGE STUDENT #SNACKS #SELL #TOLLGATE #POOR FAMILY STORY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. College student who sell snacks in tollgate poor family story | Tamil Nadu News.