’மொதல்ல அமைச்சர்கள் 8-வது பாஸ் பண்ணட்டும்‘.. ‘ஊர் பேர கூட படிக்கத் தெரியல.. கேவலம்’.. சீமான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 16, 2019 06:16 PM

சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியவை:

Seeman Angry Speech Over Subhashree and Hindi Issue

திமுக, அதிமுக ஆகிய 2 பெரும் திராவிட கட்சிகள்தான் பேனர் முறையை கொண்டுவந்தனர்.  அந்த சரிந்ததால் தடுமாறி தங்கை சுபஸ்ரீ கீழே விழுந்தார். அதனால் அவருக்கு முன்னால் வந்துகொண்டிருந்த வாகன ஓட்டியினால் உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் அவர் சற்றே கவனத்துடன் இருந்திருப்பார். 

இதைவிட பொறுப்பற்ற பதிலாக, 1000 பேனர் வைத்தால், ஒரு பேனர் விழத்தான் செய்யும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியதை நான் பார்க்கிறேன். இதேபோல் கொலை செய்தவரை விட்டுவிட்டு கத்தி அடித்தவரை கைது செய்வதுபோல் பேனர் தயார் செய்யும் இடத்தில் சீல் வைத்தது வேடிக்கையாக இருக்கிறது. இனி அனைத்து கட்சிகளும் இந்த கலாச்சாரத்தை குறைக்க வேண்டும். 

இதற்குக் காரணமானவர்களிடம் அதிகாரம் இருந்தால் அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள். இதேபோல் கல்வியை பொறுத்தவரை மாணவர்கள் சிறு வயதிலேயே வைக்கப்படும் பொதுதேர்வினால் மிகவும் சிரமப்படுகிறார்கள். முதலில் இங்கிருக்கும் அமைச்சர்கள் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும்? அவர்கள் பாஸ் ஆனால் குழந்தைகளை படிக்க வைக்கலாம். 

பார்த்து படிக்கும்போதே லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பெயர்களை பார்த்து படிக்கவே முடியாதவர்கள்தான் இங்கு அமைச்சர்களாய் உள்ளார்கள், இதெல்லாம் கேவளம். இன்னும் இந்த ஆட்சி முடிய ஒரு வருஷம்தானே இருக்கு என்று நினைக்க முடியவில்லை. இன்னும் ஒரு வருஷம் இருக்கா... என்றுதான் நினைக்க தோன்றுகிறது.ஒரு வருடம் அரசின் செலவில் எல்லா இடங்களிலும் சுற்றிப் பார்த்துவிட்டு வரட்டும்.

தேசிய இனங்களின் மொழிடை அழிப்பது வன்முறை; பல மொழிகள் என்றிருந்தால் இந்த நாடு இருக்கும், ஒரே மொழிதான் என்றால் பல நாடுகள் பிறக்கும். அது தேசிய மொழி என்றால், உலக மொழியாகவும், மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகவும் இருக்கும் தமிழே அந்த ஒரு மொழியாக இருக்கட்டுமே? அதற்கு ஒப்புக்கொள்வீர்களா? எல்லாரும் ஆங்கிலத்தில் படிக்கும்போதே எதற்கு இந்தி? இந்தி நேஷனல் லாங்வேஜ்? நாங்க ரீஜனல் லாங்வேஜா? இதை எப்படி நாங்கள் சகித்துக் கொள்வது? எப்படி ஏற்றுக்கொள்வது?

இவ்வாறு சீமான் பேசினார். 

Tags : #SEEMAN #SUBHASHREE