'பிரபல நடிகையின் வீட்டில்...' 'நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த நபர்...' யார் இந்த மர்ம மனிதன்...? - பதற வைத்த சிசிடிவி காட்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை கவுதமி அவர்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் தமிழ் சினிமா நடிகையான கவுதமி வசித்து வருகிறார். இந்நிலையில் கவுதமியின் வீட்டு வளாகத்துக்குள் மர்மநபர் ஒருவர் நேற்றிரவு திடீரென சுவர் ஏறி குதித்துள்ளார்.
மேலும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோவை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்குவந்த நீலாங்கரை போலீசார் வந்து சுவர் ஏறி குதித்த மர்ம நபரை விரட்டி பிடித்துள்ளனர்.
போலிசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டுக்குள் அத்துமீறி குறித்த இளைஞரின் பெயர் பாண்டியன் எனவும், அவர் பெயிண்டராக வேலை பார்ப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் குடிபோதையில் சுவர் ஏறிக் குதித்ததும் போலிசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மற்ற செய்திகள்
