“மாட்டோம்... இது எங்க வீடு!”.. '43 வருஷமாக வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய குடும்பம்!'.. 'நொடியில் மளமளவென சரிந்து தரைமட்டமாகிய 5 மாடி குடியிருப்பு பில்டிங்!'.. சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரி எதிரில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இருந்தது. 1977ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 13 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.
ஓராண்டுக்கு முன்பு இந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கிய இம்ரான் என்பவர் பழமையான கட்டிடம் என்பதால் 12 குடியிருப்புவாசிகளை வெளியேற்றினார். ஆனால் 1977ஆம் ஆண்டு இந்த கட்டடத்துக்கு 5 வருடத்துக்கு தரவாடகைக்கு வந்த ரசியா பேகம், பின்னர் தன் மாமனாரின் செல்வாக்கை செலுத்தி வீட்டை காலி செய்ய மறுத்து, வீட்டை சொந்தம் கொண்டாடும் விதமாக வீட்டில் நிரந்தரமாக தங்கியுள்ளார்.
இதனால் இந்த கட்டிடத்தின் மீது வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் கிரில் கதவு மட்டும் நேற்றிரவு இடிந்து விழுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த ரசியா பேகம் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற, அடுத்த ஒரு மணி நேரத்தில், 5 மாடி கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

மற்ற செய்திகள்
