"பாத்துட்டேன், என் 'தளபதி'ய பாத்துட்டேன்..." ஆசை நிறைவேறிய உற்சாகத்தில் 'இளம்' வீரர்,,.. வேற லெவலில் வைரலாகும் 'புகைப்படம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்த சீசனில் களமிறங்கிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மிகச் சிறப்பாக பந்து வீசி அசத்தியிருந்தார்.
![varun chakravarthy meets thalapathy vijay and pic gone viral varun chakravarthy meets thalapathy vijay and pic gone viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/varun-chakravarthy-meets-thalapathy-vijay-and-pic-gone-viral.jpg)
அது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய டி 20 அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், தற்போது காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
முன்னதாக, இந்த ஐபிஎல் தொடரில் தோனி உட்பட சில முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார். அது மட்டுமில்லாமல், கொல்கத்தா அணி வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றில் வருண் சக்ரவர்த்தி கையில் நடிகர் விஜய்யின் டாட்டூ இருந்தது அதிகம் வைரலானது.
வருண் சக்ரவர்த்தி தான் மிகப் பெரிய தளபதி ரசிகர் என்றும், அவரை ஒருமுறையாவது நேரில் சந்திக்கத் தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது வருண் சக்கரவர்த்தியின் ஆசை நிறைவேறியுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிவடைந்து திரும்பியுள்ள வருண் சக்ரவர்த்தி, நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்த புகைப்படம் தற்போது அதிக வைரலாகி வருகிறது.
Ulla vandha powera-di,
Anna yaaru?…
THALAPATHY.. #vaathicoming#vaathiraid #master #ThalapathyVijay 🤩😘 pic.twitter.com/TFoPqxn65J
— Varun Chakaravarthy (@chakaravarthy29) November 17, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)