'மாடியில ஜன்னல் கம்பி அறுக்கிற சத்தம்...' 'டவுட் ஆன கீழ் வீட்டுக்காரர்...' - டக்குன்னு வேற மாதிரி யோசிச்சு பதில் சொன்ன திருடன்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பட்டப்பகலில் கார்பெண்ட்டர் ஒருவரது வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ் சந்திரா. இவர் கார்ப்பெண்டராக பணிபுரிந்து வருகிறார். கைலாஷ் சந்திரா வேலைக்காக வீட்டைவிட்டு வெளியே சென்றபோது, வீட்டுக்கு வந்த திருடன், வீட்டின் பின்பக்கம் கிடந்த கட்டிங் மெஷினைக் கொண்டு ஜன்னல் கம்பிகளை அறுத்து, உள்ளே நுழைந்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வீட்டின் கீழ்தளத்தில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் திருடனைப் பார்த்து இருக்கிறார். ஆனால் அடிக்கடி வெளிநபர்கள் வந்து செல்லும் வீடு என்பதால் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுக்கும்போது ஏற்பட்ட சத்தம் கேட்டு திருடனிடன் கேட்டபோது, ‘வீட்டில் வேலை நடக்கிறது’ என கொள்ளையன் இந்தியில் கூறியதாக கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.