'வங்கித் தேர்வில் எழுந்த சிக்கல்'... 'இனி தமிழிலும் எழுதலாம்?'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jul 04, 2019 05:28 PM

கிராமப்புற வங்கி பணிகளுக்கான தேர்வுகளை, தமிழ் உள்பட 13 மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Bank recruitment exams will now be held in 13 regional languages

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வை, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்துகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொதுவாக ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகிறன. இதனால் மற்ற மொழிகளில் பயின்றவர்களுக்கு அசெளகர்யமான சூழ்நிலையும் வங்கித் தேர்வை கையாள்வதில் சிக்கலும் இருந்து வந்தன.

இந்நிலையில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி (RRB) வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ், தெலுங்கு, உருது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் வங்கித் தேர்வு எழுதுபவர்களுக்கு எளிமையாகவும் மற்றும் புரியும் விதமாகவும் இருக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags : #PARLIAMENT #NIRMALASITHARAMAN #BANK #EXAM