'டேலன்ட்' உள்ள ப்ளேயர் ஒருத்தர் கூட 'இந்தியா'ல கிடையாது...! 'எங்க' கூட விளையாடி பார்த்தா அப்போ தெரியும்...! - 'முன்னாள் வீரரின்' பேச்சால் கொந்தளிக்கும் ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ள விஷயம் தற்போது இந்திய ரசிகர்களை எரிச்சல் ஊட்டியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் போட்டி தொடர் ஏதும் நடைபெறாமல் உள்ளது.
இந்த நிகழ்வு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் ARY நியூஸ் கிரிக்கெட் ஷோவில் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன காரணம் இந்திய ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
அதில், ' இப்போதிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனரா என்பதே கேள்வி.
இதற்கு பதில் அளித்த ரசாக் "இன்றைய பாகிஸ்தான் வீரர்களிடம் இந்தியாவால் போட்டி போட முடியாது. முன்பு இம்ரான் கான் - கபில் தேவ், வாசிம் அக்ரம், ஜாவித் மியண்டட் - கவாஸ்கர், பிறகு இன்சமாம்-யூனிஸ்-யூசுப்-அஃப்ரிடி மாதிரியான வீரர்கள் போட்டியிடத் தகுந்தவாறு இருந்தனர். கடைசியாக சொல்லிக் கொள்ளும்படியான வீரர்களாக டிராவிட் மற்றும் சேவாக் இருந்தனர்.
ஆனால், இப்போது இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாருக்கும் திறமையில்லை. இந்திய வீரர்களை ஒப்பிடுகையில் பாகிஸ்தான் அணி வீரர்களின் திறமை முற்றிலும் மாறுபட்டது.
முன்பு போல் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடந்தால், ஆட்டத்தில் அழுத்தத்தை வீரர்கள் எந்தளவுக்கு சமாளிக்கிறார்கள் என்பதை அறிய முடியும். இதுபோன்று இந்தியா பாகிஸ்தான் தொடர் நடைபெறாமல் இருப்பது கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல.
ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் தொடர் நடைபெற்று இருந்தால் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் வீரர்கள் திறமை மிக்கவர்கள் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள்.
இதை அறியவிடாமல் இருப்பதற்காகவே இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியை நிராகரித்து வருகிறது' எனக் கூறியுள்ளார்.
இந்த பேச்சு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் 20 முறை ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டில் மோதி விளையாடியுள்ளன. அதில் இந்தியா 15 முறை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதோடு டி-20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா பாகிஸ்தான் மோதிய 7 தொடர்களிலும் இந்தியா மட்டுமே வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.