எந்த 'பிரச்சனையும்' பண்ண மாட்டேன்னு 'எழுதி' கொடுத்த அப்புறம் தான் 'கல்யாணமே' நடந்துச்சு...! '15 நாள்கள் கழித்து...' - அதிகாலை 'கண்விழித்த' கணவருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் 15 தினங்களில் கணவன் வீட்டில் இருந்து பத்து பவுன் நகை, திருமண விழாவின் போது கிடைத்த இரண்டு ரூபாய் மொய் பணத்தோடு புதுப்பெண் ஒருவர் தனது காதலனுடன் ஓடிய சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (26). இவர் துபாயில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கும் சின்ன தெற்குகாட்டைச் சேர்ந்த கற்பகவள்ளி (19), என்பவருக்கும் கடந்த ஜூன் 26-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்து 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில், நேற்று முன்தினம் (10-07-2021) அதிகாலை விக்னேஷ் கண்விழித்தபோது கற்பகவள்ளியை காணவில்லை. தன் மனைவி எங்கே சென்றுவிட்டார் என வீட்டை சுற்றியும், பலவேறு இடங்களில் தேடியுள்ளார். ஆனால் மனைவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவரது பெற்றோருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
விக்னேஷ் வீட்டிற்கு வந்த கற்பகவள்ளியின் பெற்றோர் அதிர்ச்சியளிக்கும் விதமான தகவல் ஒன்றைத் தெரிவித்தனர். அதாவது தனியார் கல்லுாரியில் தங்கள் மகள் இரண்டாம் ஆண்டு படித்து வந்த போது மணிகண்டன் (25), என்பவருடன் பழக்கம் இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும் 'கற்பகவள்ளி திருமணத்தில் எந்த தகராறும் செய்ய மாட்டேன்' என்று திருமணம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஊரின் முக்கிய புள்ளிகள் முன்னிலையில் மணிகண்டன் எழுதிக் கொடுத்த பின்னர் தான் திருமணம் நடந்தது' என கூறியுள்ளனர். இதனையடுத்து விக்னேஷின் தந்தை முருகேசன் பேராவூரணி காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தியபோது, திருமண விழாவின் போது கிடைத்த 2 லட்சம் ரூபாய் மொய் பணம், மற்றும் பத்து பவுன் நகை, விக்னேஷின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன், மற்றும் புடவைகளை எடுத்துக் கொண்டு கற்பகவள்ளி மணிகண்டனுடன் சென்றது தற்போது தெரிய வந்துள்ளது. .இது குறித்து மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
