'ஒரே நாள்ல எல்லாம் முடிஞ்சிடுச்சு'... 'நேரில்' சென்று பார்ப்பதற்குள் 'இளம்பெண்ணுக்கு' நேர்ந்த 'துயரம்'... 'கதறும்' சகோதரர்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 03, 2020 04:23 PM

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொரோனா அறிகுறி தெரிந்த மறுநாளே உயிரிழந்துள்ளார்.

US Diagnosed With Coronavirus 32 YO LA Woman Dies Next Day

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கியுள்ள அமெரிக்காவில் வைரஸ் அறிகுறி தெரிந்த மறுநாளே இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள துயரம் நடந்துள்ளது. மத்திய அமெரிக்காவின் எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்த 32 வயதான அந்தப் பெண் அவருடைய சகோதரருடன் கடந்த 3 ஆண்டுகளாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி உடல் வலி இருப்பதாக அந்தப் பெண் தன் சகோதரரிடம் கூறியுள்ளார்.

அவருடைய மரணம் குறித்து பேசியுள்ள சகோதரர், "கடந்த மார்ச் 23ஆம் தேதிவரை என் சகோதரி நன்றாக ஆரோக்கியத்துடன்தான் இருந்தார். பின்னர் உடல் வலி, உடல் நடுக்கமாக இருப்பதாகக் கூறினார். கொரோனா தொற்றாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தபோதும், உடல் வலிக்கும் கொரோனாவிற்கும் தொடர்பில்லை என நினைத்து அவருக்கு முதலுதவி மருந்துகளைக் கொடுத்தேன். இதையடுத்து மறுநாள் அவருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக எனக்கு போன் வந்தது. ஆனால் நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

ஒரே நாளில் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஒரே நாளில் எல்லாமே முடிந்துவிட்டது. என் சகோதரி உயிர் பிரியும் நேரத்தில் வலியில் துடித்தபோது ஆறுதல் சொல்லக் கூட அருகில் யாரும் இல்லை. இதுபோன்ற நிலை யாருக்குமே வரக்கூடாது” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUS #US #WOMAN #BROTHER #COVID-19