‘ஹாஸ்டலில்’... ‘சமையல் மாஸ்டர் செய்த வேலை’... 'பதறிப்போன பெண்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 12, 2019 08:14 PM

சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில், குளிக்கும் பெண்களை, மறைந்திருந்து வீடியோ எடுத்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

man arrested for taking video of women hostel while bathing

சென்னை காரப்பாக்கத்தில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட பிரசாத் (22) என்பவர், கடந்த 3 மாதக்காலமாக சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த பெண்கள் குளியலறை அருகே, சமையல்காரர் மறைந்தவாறு நீண்டநேரம் நின்று கொண்டிருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து பார்த்தபோது, அவரது கையில் செல்ஃபோன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதன்மூலம் குளியலறை உள்ளே குளிக்கும் பெண்களை, சமையல் மாஸ்டரான வெங்கட பிரசாத் வீடியோ எடுத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, பதறிப்போன பெண்கள், விடுதி நிர்வாகத்திடம் சென்று கூறினர்.  அதன்பின்னர் அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சமையல் மாஸ்டர் வெங்கட பிரசாத் மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதன்பேரில் அவரிடம் நடத்திய விசாரணையில், விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் குளிப்பதை, வீடியோ எடுத்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags : #VIDEO