'இந்தியா' திரும்பிய கர்ப்பிணி 'மனைவி'... அதே விமானத்தில் 'சடலமாக' வந்த கணவர்... நெஞ்சை உருக்கும் 'துயர' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னுடைய கணவர் சடலமாக வருவது தெரியாமல், அதே விமானத்தில் மனைவி பயணித்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தை சேர்ந்தவர் முஹம்மது ஜாகீர்(30) இவருக்கும் ஷிபானா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஜாகீர் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஓமன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை நண்பர்களுடன் கால்பந்து விளையாடும்போது ஜாகீர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதனால் அதிர்ந்து போன நண்பர்கள் அவரது மனைவியிடம் சென்று ஜாகீருக்கு கொரோனா தொற்று உள்ளது. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறோம்.
அதனால் நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். இந்தியா செல்லுங்கள். என வற்புறுத்தி இருக்கின்றனர். ஷிபானா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரது நண்பர்கள் பொய் சொல்லி ஷிபானாவுக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து இந்தியா அனுப்பி இருக்கின்றனர். வேறு வழியின்றி ஷிபானா இந்தியா கிளம்ப அவருக்கு ஜாகீரின் நண்பர்கள் டிக்கெட் எடுத்துக்கொடுத்து இருக்கின்றனர். இதில் சோகம் என்னவென்றால் ஷிபானா பயணித்த அதே விமானத்தில் அவரது கணவரின் சடலத்தையும் எடுத்து வந்துள்ளனர்.
ஒருவழியாக ஊருக்கு வந்த பின் இந்த விவரத்தை அவரிடம் சொல்லி இருக்கின்றனர். அதுவரை உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரிடம் இந்த உண்மையை மறைத்துள்ளனர். இந்த துயர சம்பவம் ஜாகீரின் உறவினர்கள் மூலமாக தற்போது செய்திகளில் கசிந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன் கணவருடன் விமானத்தில் பயணித்த பெண், கணவர் இறந்த சம்பவம் தெரியாமல் அதே விமானத்தில் இந்தியா திரும்பிய சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
