“தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 15,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!” - அமைச்சர் விஜயபாஸ்கர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது,

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது என்றும் இந்த நோய் சமூகத்தொற்றாக மாறி பரவுகிறது என்றும் மாநில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிநாட்டில் இருந்து வந்த 15,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை சாம்பிள் பரிசோதனை செய்யப்பட்ட 743 பேரில் 608 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 120 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், ஒருவர் குணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags : #CORONAVIRUSOUTBREAKINDIA #VIJAYABASKAR
