பிரேசில் நாட்டு பணத்துடன்... மதுரை பஜாரில் சிக்கிய நபர்!.. காவல்துறை போட்ட 'ஸ்கெட்ச்'... அடுத்தடுத்து 9 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் 52 லட்ச ரூபாய் மதிப்பிலான பிரேசில் நாட்டுப் பணத்துடன் சிக்கிய நபரை பொறியாக வைத்து 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகருக்குள் வெளிநாட்டுப் பணம் பெருமளவில் கைமாற உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர்.
ரயில் நிலையம் அடுத்த மீனாட்சி பஜாரில் சந்தேகத்துக்கு இடமான வகையில், கையில் பெட்டியுடன் நின்றிருந்த கருணாமூர்த்தி என்பவனை பரிசோதித்தபோது, பெட்டியில் 52 லட்ச ரூபாய் மதிப்பிலான பிரேசில் நாட்டு பணம் சிக்கியது.
போலீசாரின் முறையான விசாரணையில் அவரிடம் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதற்கு இன்னும் சிலர் வருவதாக கூறியதன் பேரில் அவரை அந்த இடத்தில் நிறுத்தி போலீசார் கண்காணித்தனர்.
அப்போது, அவரிடம் பணம் மாற்ற வந்த ராஜேந்திரன், திருமாவளவன், ராமர், உதயகுமார் , மகாலட்சுமி என்ற பெண் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மற்ற செய்திகள்
