'உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு.. நான் சொல்ற இடத்துக்கு வாங்க!'.. ஆசை ஆசையாக முகநூல் காதலியை பார்க்க போன நபருக்கு நேர்ந்த கதி.. சிக்கிய 20 வயது பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 09, 2020 10:57 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அன்புச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் 31 வயதான வினோத்குமார். திருச்சி காஜாமலை முஸ்லிம் தெருவைச் சேர்ந்த 20 வயது ரகமத் நிஷா என்கிற பெண்ணுடன் இவருக்கு ஒரு வருடத்துக்கு முன் முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து இருவரும் வாட்ஸ்அப் மூலம் பழகி வந்தனர்.

facebook love:Trichy woman calls youth and kidnapped him for money

ஒரு கட்டத்தில் வினோத்குமாரிடம்,  “நான் உங்களை உண்மையிலே காதலிக்கிறேன்” என கூறிய ரகமத் நிஷா, 10 நாட்களுக்கு முன் வினோத்குமாரை தொடர்பு கொண்டு,  “நான் உங்களை உடனே பாக்கணும், திருச்சிக்கு வாங்க” என்று அழைத்துள்ளார். வினோத்குமாரும் அவரை நம்பி தனது விலையுயர்ந்த தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 5-ம் தேதி திருச்சிக்கு சென்றதுடன், மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகில் இருந்தபடி ரகமத்நிஷாவை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, அங்கு ஒரு ஆட்டோவில் அங்கு வந்த சிலர், ரகமத்நிஷாவின் உறவினர்கள் என்று வினோத்குமாரிடம் கூறியதுடன்,   வினோத்குமாரை ஆட்டோவில் ஏற்றி கன்டோன்மென்ட் வஉசி சாலையிலுள்ள ஒரு வீட்டுக்குக் கடத்திச் சென்றனர். பின்னர் ரூ.1 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என மிரட்டினர்.  வினோத்குமாரோ தன்னிடம் பணம் இல்லை என  கூறியதால், அவருடைய விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு, “பணத்தை கொடுத்துட்டு வண்டியை வாங்கிக்க” என்று கூறி, அவரை எம்ஜிஆர் சிலை பகுதியில் விட்டுச் சென்றனர்.

இதனை அடுத்து திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வினோத்குமார் அளித்த புகாரை அடுத்து, அந்த கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். அவர்கள் பாணியிலே திட்டமிட்ட போலீஸார்,  ரூ.1 லட்சம் தயாராக இருப்பதாகவும், அதை வாங்கிக்கொண்டு வண்டியை தருமாறும் வினோத்குமார் மூலம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் பேசவைத்துள்ளனர்.  இதைநம்பி பணத்தைப் பெற வந்தபோது ரகமத்நிஷா, மற்றும் அவரது கூட்டாளிகளான வள்ளுவர்நகரைச் சேர்ந்த ஆசிக் (எ) நிவாஸ்(21), பாலக்கரை முகமது யாசர்(22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

பிஎஸ்சி பட்டதாரியான ரகமத் நிஷாவுக்கு அன்சாரி என்பவருக்கும் செப்.2-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில்,  அன்சாரியும் இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது. இப்படி முகநூலில் உள்ள இளைஞர்களிடம் திட்டமிட்டு பழகி, அவர்களிடம் போலியான புகைப்படங்களை அனுப்பி ஏமாற்றி, ஆசை வார்த்தை பேசி நேரில் வரவழைத்து பணம், நகை, பொருட்களை பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்ட இந்த கும்பலால், திருச்சி, தஞ்சை, முசிறியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் அன்சாரி உட்பட தலைமறைவாக இருக்கும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Facebook love:Trichy woman calls youth and kidnapped him for money | Tamil Nadu News.