'ரொம்ப எதிர்பார்த்த தடுப்பூசி'... 'அங்க என்னதான் நடக்குது?'... 'அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு நடுவே'... 'வெளியாகியுள்ள குட் நியூஸ்!'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Sep 11, 2020 09:57 AM

பரிசோதனை மீண்டும் தொடங்கினால் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குறித்த இறுதி முடிவு இந்த ஆண்டு இறுதிக்குள் தெரிவிந்துவிடும் என அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

AstraZeneca Expects Oxford Corona Vaccine Result By Year End

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால், இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதையடுத்து கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பெரும் பின்னடைவாக இது கருதப்பட்ட நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பாசல் சோரியட், "தடுப்பூசி பரிசோதனையின்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். மற்ற நிறுவனங்களும் அவர்களுடைய கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்துவதும், அதுதொடர்பான ஆராய்ச்சியை மீண்டும் தொடர்வதும் உண்டு.

மற்ற தடுப்பூசி நிறுவனங்களுக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் எங்களை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது. அவர்களை கவனிப்பது இல்லை. தடுப்பூசியால் ஒரு நபருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விரைவில் மீண்டும் பரிசோதனை தொடங்கும் பட்சத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துகிறதா என்ற இறுதி மற்றும் முழுமையான முடிவு தெரிந்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. AstraZeneca Expects Oxford Corona Vaccine Result By Year End | World News.