'பலரின் நீண்ட நாள் ஆசை'... 'போலீசாருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சென்னை காவல் ஆணையர்'... அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிறந்த நாளில் போலீஸாருக்கு விடுமுறை அளிக்கச் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராகக் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வால் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கொரோனா காரணமாகப் பொதுமக்களின் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் கேட்கும் முறையைக் கொண்டு வந்தது, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதது. அதே போன்று சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் போலீஸாருக்கு பிறந்த நாளில் விடுமுறை அளிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு போலீசாருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. போலீசாருக்கு முக்கியமான நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் இருப்பதே பெரும் மன குறையாக இருந்து வரும் நிலையில், காவல் ஆணையரின் இந்த அறிவிப்பு போலீசாருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும் பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
