"உலகம் பூரா 'கொரோனா' பரவி கெடக்கு",,.. "'ஜல்லிக்கட்டு' நடத்த இது தான் பெஸ்ட் 'ஸ்பாட்'"..,, வைரலாகும் இளைஞரின் அனுமதி 'கடிதம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கோரி நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில், கைலாசா என்னும் தனி நாடு ஒன்றை நித்தியானந்தா உருவாக்கியதாக தெரிவித்து வந்த நிலையில், தங்களின் நாட்டிற்கான நாணயங்கள், கொடி என்ன என்பது குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, மதுரை டெம்பிள் சிட்டி உணவகத்தின் கிளை ஒன்றை கைலாசாவில் திறக்க அனுமதி கோரி அதன் உரிமையாளர் குமார், நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதே போல, விவசாயி ஒருவரும் கைலாசாவில் விவசாயம் செய்ய நிலம் வேண்டி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வீர ராமர் என்ற இளைஞர் ஒருவர் 2021 ஆம் ஆண்டு கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டி மதுரையின் வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் சார்பில் கடிதம் ஒன்றை நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'கொரோனா உலகம் எங்கும் பரவிக் கிடப்பதால், கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுகளை நடத்துவது என்பது பெரும் சவாலாக உள்ளது. ஆதலால், கொரோனா இல்லாத கைலாஸாவில் வைத்து அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதியளிக்க வேண்டும்' என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
